இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
தற்போது, யுஜிசி சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் 21 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களைப் போலியான பல்கலைக்கழகங்களாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த பல்கலைக்கழகங்களுக்குப் பட்டம் வழங்க அதிகாரம் இல்லை என்பதையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தரப் பிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2 பல்கலைக்கழகங்கள், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 1 பல்கலைக்கழகமும் போலி பல்கலைக்கழகங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் என்ற கல்வி நிறுவனம் போலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ராமநாதபுரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்