கல்விக் கட்டணம் : யுஜிசியின் உத்தரவு – நிம்மதி பெருமூச்சு விட்ட பெற்றோர்கள் !

இந்தியா

பெற்றோர்கள் மற்றும் இளங்கலை மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய வகையில் யுஜிசி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், கல்லூரி, பல்கலைகழகங்களில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் எவ்வித காரணங்களுக்காக வெளியேறினாலும்  அவர்கள் செலுத்திய முழுக் கட்டணத்தையும் திரும்பித்தர வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுவரை கல்லூரிகளிலோ, பல்கலைகழகங்களிலோ வகுப்புகள் தொடங்கிய பிறகு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தருவது இல்லை.  மேலும் அவர்களிடம் சேர்க்கையை ரத்து செய்யவும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவர்கள் புகார் அளித்திருந்த நிலையில் யுஜிசி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சியுஇடிதேர்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இத்தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும். மேலும் நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை.

பல மாணவர்கள் தற்போது தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் சீட் பெற்றுள்ளனர்.. இவ்வாறு சேர்ந்துள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் இடம் கிடைக்கும்போது ஏற்கனவே சேர்ந்துள்ள கல்லூரிகளில் இருந்து விலக வாய்ப்புண்டு.

எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு யுஜிசி இதனை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பெற்றோர்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

  • க.சீனிவாசன்

ஆகஸ்ட் 5 முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு !

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *