இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை இன்று (ஜூன் 13) தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி நடைபெற்றது. 13 மொழிகளில் நாடு முழுவதும் மொத்தம் 499 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் இன்று இரவு 9 மணியளவில் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு நீட் தேர்வில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 1 லட்சத்து 44,516 பேரில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில், தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி என்ற மாணவனும் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
தேசிய அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
மோனிஷா