ரயில் நிலையத்தில் உள்ள இரும்பு தூண்களுக்கு இடையில் பெண்குழந்தையின் தலை சிக்கி கொண்ட நிலையில், பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் பயணம் செய்வதற்காக ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியர் தங்களது 2 வயது பெண் குழந்தையுடன் நடைமேடையில் காத்திருந்தனர்.
ரயில் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அவர்கள் வந்த நிலையில், குழந்தை நடைமேடையில் இருந்த இரும்பு தூண் அருகே நின்று விளையாடிக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை இரும்புத் தூண் இடையே சிக்கிகொண்டது. தனது தலையை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்ட குழந்தை வலியால் அலறியது. இதனைக்கண்ட பெற்றோரும் குழந்தையை மீட்க முடியாமல் பதற்றத்தில் கதறினர்.
இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசாரும், திருப்பதி ஐஆர்சிடிசி மேலாளருமான வேணுகோபாலும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
குழந்தை சிக்கி கொண்டு தவிப்பதை கண்ட அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி இரும்பு கட்டர் மெஷினை கொண்டு வந்து தூணை வெட்டி எடுத்த ஊழியர்கள், பத்திரமாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும் பொதுஇடங்களுக்கு குழந்தையை அழைத்து வரும்போது, கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோருக்கும் அறிவுறுத்தி உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மனதை உலுக்கும் மணிப்பூர் சம்பவம்: யானைமலை மீது போராட்டம்!
கிளிசரின் கண்ணீர் வடித்தவர்கள் எங்கே?: குஷ்புவை சாடிய கீதா ஜீவன்