இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று ட்விட்டர் அலுவலகங்களில் இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து அவர் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தார்.

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனமானது டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று இடங்களில் இயங்கி வருகிறது.
இந்தநிலையில், செலவினங்களை குறைக்கும் நோக்கில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டு அந்த நிறுவனங்களில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ட்விட்டர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. ட்விட்டர் இந்தியாவில் பணிபுரியும் 90 சதவிகித ஊழியர்கள் இந்த இரண்டு அலுவலங்களிலும் பணிபுரிந்து வந்தனர்.
ட்விட்டர் இந்தியாவின் செயல்பாடுகள் பெங்களூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ட்விட்டர் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
செல்வம்
தனுஷ் – செல்வராகவன் நேரடி மோதல்!
வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு வர உத்தரவு!