ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த நவம்பர் மாதம் வாங்கினார். அதனை தொடர்ந்து ப்ளூ டிக் கட்டணம், ட்விட்டர் கொள்கைகளை மாற்றியமைத்தது, ஊழியர்களை பணி நீக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில், டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

நியூ யார்க் டைம்ஸ் நிருபர் ரியான் மேக், தி வாஷிங்டன் போஸ்ட் நிருபர் ட்ரூ ஹால், சிஎன்என் பத்திரிகையாளர் டொனி சல்லிவன், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா பத்திரிகையாளர் ஸ்டீவ் ஹெர்மன், தி இண்டர்செஃப்ட்ஸ் பத்திரிகையாளர் மிகா லீ உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், சுதந்திர பத்திரிகையாளர்கள் ஆரோன் ரூபார், டோனி வெப்ஸ்டர், கெய்த் ஒல்பர்மான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
சிஎன்என், தி நியூ யார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் ட்விட்டரின் இந்த நடவடிக்கையானது நியாயமற்றது என்றும் இதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த நவம்பர் மாதம் வாங்கியவுடன் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
அன்று பால், இன்று நெய்: விலை உயர்த்திய ஆவின்
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை: மாநகராட்சி விளக்கம்!