சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா மீண்டும் நியமனம்!

இந்தியா

சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள துஷார் மேத்தாவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று(ஜூன் 30) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இவர் தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

இந்நிலையில்,சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள துஷார் மேத்தாவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று(ஜூன் 30) உத்தரவிட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம்ஜீத் பானர்ஜி, கே.எம்.நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன் மற்றும் ஐஸ்வர்யா பாடி ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா, குஜராத் மற்றும் பாட்னா உயர் நீதிமன்றங்களில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக சேத்தன் சர்மா, சத்ய பால் ஜெயின், தேவங் கிரீஷ் வியாஸ் மற்றும் டாக்டர் கிருஷ்ணா நந்தன் சிங் ஆகியோரையும் மத்திய அரசு மீண்டும் நியமித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’போஸ்டர் வெளியீடு!

17 வயது சிறுவன் கொலையால் பற்றி எரியும் பிரான்ஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *