பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானை தாக்கிய சுனாமி!

Published On:

| By Monisha

tsunami warning for japan

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்க தொடங்கியுள்ளது.

ஜப்பானின் இஷிகாவா என்ற பகுதியில் இன்று (ஜனவரி 1) காலை 5.6 மற்றும் 7.4 ரிக்டர் அளவுகோலில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் மேற்கு கடற்கரையில் சுமார் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது ஏற்பட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கோயாமா, இஷிகாவா, வஜிமா, ஹையோகோ, நிகாடா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது வஜிமா பகுதியில் சுனாமி அலைகள் தாக்க தொடங்கியுள்ளன. சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஜப்பானை தாக்குகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

‘கனவில் வருவது பிடிக்கும் என்றேன்’ மணியை கிண்டலடித்த போட்டியாளர்கள்!

தூங்கி கொண்டிருந்த 4 பேர் பரிதாப பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share