துருக்கி சிரியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Published On:

| By Selvam

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்குகிறது.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை 4.17 மணியளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.5 ஆக பதிவானது.

turkey syria earthquake death 23700 rescue efforts continue

இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் அடுக்கு மாடி குடியிருப்புகள், வீடுகள், சாலைகள் அனைத்தும் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி மக்கள் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 23,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் துருக்கி மற்றும் சிரியாவிற்கு விரைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 841 அட்டைப்பெட்டிகளில் மருந்து மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கடும் குளிரில் உணவின்றி தவிக்கின்றனர். இதனால் ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு பொருளாதார உதவிகள் செய்து வருகின்றனர்.

நேற்று கடற்கரை நகரமான ஜப்லேவில் ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை மீட்புப்படையினர் பத்திரமாக காப்பாற்றினர்.

turkey syria earthquake death 23700 rescue efforts continue

மீட்கப்பட்டவர்கள் துகா நுரல்லா என்பவரது இரண்டு மகன்களான இப்ராகிம் சக்காரியா, ரவியா என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். துருக்கி சிரியாவில் தொடர்ந்து மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

குட்கா, கஞ்சா போதைப்பொருள்..டாஸ்மாக்கில் விற்கப்படுவது புனித தீர்த்தமா? சீமான் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share