அடி மேல் அடி! துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

Published On:

| By christopher

துருக்கியில் நேற்று (பிப்ரவரி 20) இரவு ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களால் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

துருக்கி-சிரியா எல்லையில் உள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த 6-ந் தேதி அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது.

துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் சிரியாவின் வடமேற்கில் உள்ள மாகாணங்கள் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடமைகள், உறவுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறி உள்ளனர்.

தொடர்ந்து 2 வாரத்திற்கும் மேலாக இடிந்து போன கட்டிட குவியலை அகற்றி மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

turkey border again hit by 2 earthquakes

அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்

இந்நிலையில் துருக்கி, சிரியா எல்லைப்பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டிபைன் நகரைத் தாக்கிய இந்நிலநடுக்கம், தெற்கு துருக்கியின் வடக்கே 200 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள அண்டாக்கியா மற்றும் அடானா நகரங்களில் வலுவாக உணரப்பட்டுள்ளன.

இதனையடுத்த சில மணி நேரங்களில் துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த 2 நிலநடுக்கங்களால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பேனா நினைவுச் சின்னம்: ஆதரவு அதிகம்!

கிச்சன் கீர்த்தனா: கிரில்ட் மீன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel