அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிட்காயின் மதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது.
உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் துவங்கியதில் இருந்து 67,000 டாலராக இருந்த ஒரு பிட்காயின் கடந்த 10 மணி நேரத்தில் 75,400 டாலராக உச்சத்தை அடைந்துள்ளது. இதனுடைய இந்திய மதிப்பு ரூ.63,33,600 ஆகும்.
இந்த ஆண்டு முடிவதற்குள் 75,000 டாலராக உயர்ந்துள்ள பிட்காயின் 1 லட்சம் முதல் 1,20,000 டாலராக உயரும் என்கிறார் கிரிப்டோகரன்சியில் அனுபவமுள்ள மணிகண்டன்.
கிரிப்டோகரன்சியில் சுமார் 24,000 டோக்கன்கள் (வகைகள்) உள்ளது. இதில் 300 வகையான கிரிப்டோகரன்சிகள் மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. இந்தவகையான கிரிப்டோகரன்சியின் தாய் கரன்சி தான் பிட்காயின்.
கிரிப்டோகரன்சி டிரேடிங்கிற்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 30 சதவிகிதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது, கிரிப்டோகரன்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம், வரி குறைக்கப்படும், பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை விரிவுப்படுத்துவோம் என்று டிரம்ப் வாக்குறுதி தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு வரவேற்பு கிடைத்திருந்தது.
அமெரிக்காவில் பிட்காயின் மூலமாக கோல்டு வாங்குவது மிகவும் சேஃபாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
ஆனால், இந்தியாவில் ஈடிஎஃப் Exchange Traded Fund முறையில் மட்டும் தான் கோல்டு வர்த்தகம் செய்யப்படுகிறது. கிரிப்டோகரன்சி மூலமாக கோல்டு வர்த்தகம் செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.
டிரம்ப் வெற்றியால் கிரிப்டோகரன்சியில் உள்ள பிட்காயின் மதிப்பு உச்சத்தை அடைந்திருப்பது நாடு முழுவதும் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ட்ரம்ப் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த இந்திய வம்சாவளியினர்!
’அமரன்’ இயக்குநருடன் இணையும் தனுஷ் ?