அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 47 சதவிகித புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாக வால் ஸ்டீரிட் ஜர்னல் நடத்திய வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேல்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. 2.5 கோடி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் குடியரசு கட்சி சார்பிலும் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், வால் ஸ்டீரிட் ஜர்னல் தேர்தலுக்கு முந்தைய வாக்கெடுப்பு நடத்தியது. கடந்த அக்டோபர் 19 முதல் 22 ஆம் தேதி வரை நடந்த வாக்கெடுப்பில் 1,500 பேர் பங்கேற்றனர். இதில், 45 சதவிகித புள்ளிகள் பெற்று கமலா ஹாரீஸ் பின்தங்கியிருக்கிறார் . டொனால்ட் ட்ரம்புக்கு 47 சதவிகித புள்ளிகள் கிடைத்தது.
இந்த நிலையில், பென்சில்வேனியா டவுன்ஹாலில் பேசிய கமலா ஹாரிஸ், தனது நிர்வாகம் ஜோ பைடன் நிர்வாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். முதலில் மளிகை பொருள்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் போர் சூழல் நிலவும் நிலையில் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்ந்தால் அமெரிக்காவுக்கே பாதுகாப்பு இருக்காது என்று சாடியுள்ளார்.
அமெரிக்க தேர்தலில் ஜார்ஜியா, பென்சில்வேனியா உள்ளிட்ட 7 மாகாணங்களில் ட்ரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அந்த நாட்டில் முதன் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார். அமெரிக்கா சுதந்திரமடைந்து 248 ஆண்டுகளில் பெண் ஒருவர் அதிபராவது முதன் முறையாக அமையும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தொடர் ஏற்றத்திற்குப் பிறகு, இறங்கிய தங்கம் விலை… பொதுமக்கள் ஆசுவாசம்!
”ஒற்றை பனைமரம்’ ரிலீசாக கூடாது” : சீமான் எச்சரிக்கை!