கேரளா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் ஒட்டு மொத்த கவனமும் கேரளா மீதிருக்கும் நிலையில், ஆந்திராவில் ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குண்டூரிலிருந்து ராயகடா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.
விசாகப்பட்டினத்திலிருந்து பலாசா சென்று கொண்டிருந்த ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் ரயில்வேயும், தேசிய பேரிடர் மீட்பு குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் பணியைத் துரிதப்படுத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாலும், பலர் படுகாயமடைந்திருப்பதாலும் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் ஒடிசாவில் ஹவுரா- கோரமண்டல் விரைவு ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 240 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அமைச்சர்கள் மீதான வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!
கேரள குண்டுவெடிப்பு : யார் காரணம்?