கேரளாவில் ரயிலுக்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை!

இந்தியா

கேரள மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் திடீரென நள்ளிரவு 1.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தின் 3 வது நடைமேடையில் ஆலப்புழா – கண்ணூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் இந்த ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின. ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியதால் 3 பெட்டிகளில் தீ பற்றி எரிந்தன.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீ ஒரு வழியாக அணைக்கப்பட்டது.

இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இது குறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், “யாரோ ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். 3 தீயணைப்பு குழுக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் 3 ரயில் பெட்டிகளும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.” என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூரில் இதே ரயிலில் தான் ஷாருக் சைஃபி என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்த கொடூரமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சென்னையில் 3வது நாளாக பால் விநியோகம் பாதிப்பு!

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்: முதல்வர் கண்டனம்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *