பணிச்சுமையால் பெண் இறப்பா?: மத்திய அரசு விசாரணை!

இந்தியா

புனேவை சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த 26 வயது பெண் பணிச்சுமையால் உயிரிழந்துள்ளார்.

எர்னெஸ்ட் அண்ட் யங் என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம் புனேவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் அன்னா பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாயார் கூறியுள்ளார்.

எர்னெஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தின் தலைவரான ராஜு மேமானிக்கு இளம் பெண்ணின் தாயார் அனிதா எழுதியுள்ள கடிதத்தில்  “எனது மகள் பள்ளி கல்லூரியில் நன்றாக பயின்றவள் , பட்டய கணக்காளர் தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவள்.  இதுதான் அவளது முதல் பணி ஆர்வத்துடன் பணியை தொடங்கினாள் ஓய்வின்றி உழைத்தாள். ‘

கடந்த மார்ச் மாதம் வேலையில் சேர்ந்தவள் நான்கே மாதத்தில் அதாவது ஜூலை மாதம் உயிரிழந்துவிட்டாள். ஷிப்ட் நேரம் முடியும்போது அவரது மேலாளர் அவருக்கு பணிகளை வழங்குவார். அந்த வேலையை காலைக்குள் செய்து முடிக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் மேலாளருக்கு அன்னாவின் தாய் எழுதிய கண்ணீர் கடிதம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த விவகாரம் இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதோடு, அன்னாவின் இறுதிச்சடங்கில் நிறுவனத்தில் இருந்து ஒருவர் கூட பங்கேற்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, எர்னெஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்னாவின் இறப்பு தங்களுக்கு ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் தருவதாகவும் அவரின் குடும்பத்துக்கு எங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளது.மேலும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளது.

பணிச்சுமை காரணமாக ஊழியர் இறந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *