தீ விபத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து… 12 பேர் பலி!

இந்தியா

மகாராஷ்டிராவில் இன்று (அக்டோபர் 8) அதிகாலை சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த சுற்றுலா பேருந்து தீப்பிடித்தது.

பயணிகள் சுதாரிப்பதற்குள் பேருந்து முழுவதும் பரவிய தீயில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 32க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரளா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 9 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ள இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஷாருக்கானுக்கு அறுசுவை விருந்து வைத்த விஜய்!

சட்டமன்றத்தில் வீசக் காத்திருக்கும் புயல்கள்!

மத்திய அரசின் பேராசை: அழிவை நோக்கி பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.