மாநிலங்களுக்கு 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில்,
மாநிலங்களுக்கான மூலதனச் செலவினங்களுக்காக ஐம்பதாண்டு கால வட்டியில்லா கடன் திட்டத்தில் இந்த ஆண்டு ரூ 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் மாநிலங்களுக்கும் பங்களிக்கப்படும்.
லட்சத்தீவுகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான முழு செயல்திட்டம் புதிய அரசின் முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகை 14 லட்சம் கோடியாக உள்ளது.
வரிசெலுத்துவோரின் ஆதரவுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வரிசெலுத்துவோருக்கான சேவைகளில் முன்னேற்றம் காண அரசு உறுதியாக உள்ளது.
நடுத்தர வகுப்பினருக்கான வீட்டு வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுலா மேம்பாட்டுக்காக நீண்டகால அடிப்படையிலான கடன் உதவி உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றன.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவையின் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா