கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் விவரம் வெளியாகி உள்ளது.
என்ன தான் விதவிதமாக, வித்தியாசமாக கார்கள் வந்தாலும் கூட, இந்தியாவில் பைக்குகளின் தேவை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
பொல்லாதவன் தனுஷ் போல நடுத்தர வர்க்க இளைஞர்கள் மத்தியில் பைக் வாங்கும் கனவு நிச்சயம் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 1௦ பைக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதில் முதலிடத்தை ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளண்டர் பைக்கும், இரண்டாவது இடத்தை ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் பைக்கும், 3-வது இடத்தை பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்கும் பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தை ஒப்பிடும் போது நவம்பர் மாதத்தில் ஷைன் பைக்குகள் விற்பனை 35.46% உயர்ந்துள்ளது.
அதேபோல 2௦22-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது இந்த 2௦23-ம் ஆண்டு நவம்பரில் பைக்குகள் விற்பனை 31.33% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
எண்ணூர் வாயு கசிவு… தொழில்நுட்ப குழு அமைப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
மொத்தமாக களமிறங்கும் கோலிவுட்… ஒரே நாளில் வெளியாகும் 11 திரைப்படங்கள்!