Tirupati Tirumala Dollor

திருப்பதி: மீண்டும் இரண்டு, ஐந்து கிராம் தங்க டாலர்கள்: பக்தர்கள் மகிழ்ச்சி!

இந்தியா

திருப்பதியில் இரண்டு, ஐந்து கிராம் தங்க சாமி டாலர்களை தேவஸ்தான அதிகாரிகள்  மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால் பக்தர்கள் உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒருபுறம் சாமி உருவமும், மறுபுறம் ஏழுமலையான் கோயில் தங்க கோபுரமும் பதிக்கப்பட்டு விற்பனை செய்யும் சாமி டாலர்களை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இரண்டு, ஐந்து மற்றும் பத்து கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களும், ஐந்து, பத்து கிராம் வெள்ளி டாலர்களும்,  ஐந்து மற்றும் பத்து கிராம் வெண்கல சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இரண்டு கிராம் டாலர் ரூ.10,000,  ஐந்து கிராம் டாலர் ரூ.25,000 மற்றும் பத்து கிராம் டாலர் ரூ.50,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை வருவாயாகக் கிடைத்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு மற்றும் ஐந்து கிராம் டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு, பத்து கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தரிசனத்துக்கு வரும் சாமானிய பக்தர்கள் பத்து கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு டாலர்கள் மட்டுமே விற்பனையானது.
இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் அளித்தனர். பக்தர்களின் புகார்களை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் மீண்டும் இரண்டு மற்றும் ஐந்து கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்து வாங்கிச் செல்கின்றனர்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *