Devotees without tokens allowed in Tirupati

திருப்பதி: நாளை முதல் டோக்கன்கள் இல்லாத பக்தர்களுக்கும் அனுமதி!

இந்தியா
தரிசன டோக்கன்கள், டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் நாளை (ஜனவரி 2) முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆனால், இன்று கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகையை கருத்தில்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23ஆம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் இன்று (ஜனவரி 1) இரவுடன் நிறைவு பெறுகிறது. இதற்காக ஏற்கனவே சுமார் 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடைசி நாளான இன்று இரவு வேத மந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் கதவுகள் அடைக்கப்படுகிறது. முன்னதாக நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் 100 பாசுரங்கள் பாடப்படும். அதன்பிறகு சொர்க்கவாசல் கதவுகள் அடைக்கப்படும்.

இந்த நிலையில் தரிசன டோக்கன்கள், டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்களும் திருமலைக்கு வரலாம். அதற்கு தடை ஏதும் இல்லை என்றும் ஆனால் ஜனவரி 1ஆம் தேதி இரவு வரை கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை (ஜனவரி 2) முதல், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்காக டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

புத்தாண்டு நன்மை தரட்டும்! நல்லாட்சி தொடரட்டும்! முற்போக்கு சிந்தனை மலரட்டும்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *