திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன 10,000 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று (டிசம்பர் 22) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த தரிசனத்துக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10,000 நன்கொடையாக அளித்து 300 ரூபாய் தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்பட்டு மகா லகு தரிசனம் செய்து வைக்கப்படும்.
எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் வைத்து நன்கொடை செலுத்தி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-ராஜ்
இம்பேக்ட் பிளேயர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
குட்டி ஸ்டோரி கேட்க தயாரா? வாரிசு ஆடியோ லாஞ்ச்!
தமிழ் கட்டாய பாடம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு