பிகாரில் அரசு நடத்தும் பள்ளிகள் இனி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பிகாரில் தற்போது பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரமாக உள்ளது. இந்நிலையில், அரசு நடத்தும் பள்ளிகளின் நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனி பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சட்டப் பேரவையில் வெளியிட்டார். ஆனால், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, எதிர்க்கட்சியினர் பேரவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய நிதிஷ்குமார், “கல்வி நடவடிக்கைகளுக்கான பள்ளிகளின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இருக்க வேண்டும். அது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கக்கூடாது. இப்போது புதிய நேரங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்” என்றார்.
ஏற்கெனவே மகாராஷ்டிரா அரசு 2024 – 25ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி செயல்படும் வேலை நேரங்கள் குறித்தான மாற்றங்களை அறிவித்திருந்தது. முன்னதாக மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் காலை 9 மணிக்கு முன்னதாகவே தொடங்கும் வழக்கத்தை கொண்டிருந்த நிலையில் மாணவர்கள், பள்ளிக்கு கிளம்புவதற்கு அதிகாலையிலேயே தங்கள் தூக்கத்தை கெடுத்து தயாராக வேண்டிய நிலை உள்ளது. போதிய தூக்கம் இன்மை குழந்தைகளின் உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டிகர்… சாபமா? சாம்பிளா? அப்டேட் குமாரு
வருஷம் 16 : தோனிக்காக ‘சண்டை’ செய்த மும்பை… வீடியோ உள்ளே!
ஐந்து மாநிலங்களில் போட்டி: டெல்லியில் திருமாவளவன் பேட்டி!