மத்தியப்பிரதேசத்தில் காட்டுப்பன்றிக்கு வைத்த பொறியில் மின்சாரம் தாக்கி புலி ஒன்று உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிராமவாசிகள் 11 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாந்தவ்கர் தேசிய பூங்காவை ஒட்டியுள்ள ஜெய்த்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காக கிராமவாசிகள் மின்சார கம்பிகளைப் பொருத்தியிருந்தனர். இந்த நிலையில் 12 வயதுடைய புலி ஒன்று அப்பகுதியை நெருங்கி மின்சார கம்பிகளை கடந்தபோது, மின்சாரம் தாக்கி பலியானது.
15 நாட்கள் கழித்து அப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் புலியின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிராமவாசிகள் 11 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி மத்தியப்பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 785 ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 563 புலிகளும், உத்தரகாண்டில் 560 புலிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 306 இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!
சண்டே ஸ்பெஷல்: அஜீரணமா… ஹார்ட் அட்டாக்கா… அடையாளம் காண்பது எப்படி?