ஆந்திர மாநிலம் திருப்பதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
திருப்பதியில் மூன்று வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி அவரை ஏமாற்றி, சிறுமியின் மாமா அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டு உடலை புதைத்துள்ளார்.
சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தேடி, இறுதியில் போலீஸில் புகார் அளித்தனர். கொல்லப்பட்ட சிறுமியின் மாமா, குழந்தை வசித்த அதே காலனியில் வசிக்கிறார். சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி எஸ்.பி சுப்பாராயுடு கூறுகையில், “குழந்தையின் மாமாவான சுஷாந்த் என்கிற நாகராஜ் (வயது 22) குற்றவாளி என்று போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். சாக்லேட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணே எனக்கு ஒரு டவுட்டு! – அப்டேட் குமாரு
’அழுகைய அடக்கவே முடியல..!’ – ’அமரன்’ குறித்து நடிகர் ரஜினிகாந்த்
நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகள் : மோடிக்கு கார்கே பதிலடி!
பியூட்டி டிப்ஸ்: பொடுகுத் தொல்லையைப் போக்க… இதோ ஒரு சூப்பர் ஹேர் பேக்!