எந்த நிலையில் உங்கள் வங்கிக் கணக்கு உள்ளது? ஆர்பிஐ-யின் புதிய உத்தரவால் முடக்கப்படலாம்!

Published On:

| By Kavi

ரிசர்வ் வங்கி, சில வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நீண்ட நாட்கள் பயன்படுத்தாத கணக்குகளை மூன்று வகைகளாக பிரித்து அவற்றை மூட உள்ளன.

முதலாவதாக, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகளைப் பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படுகிறது. அதனால், இந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, 12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகை கணக்குகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, நீண்ட நாள்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ‘ஜீரோ பேலன்ஸ் கணக்கு’களை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நிறுத்திவைக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : பள்ளிகள் திறப்பு முதல் மலர் கண்காட்சி தொடக்கம் வரை!

கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி அரிசி உப்புமா!

டிஜிட்டல் திண்ணை: பெயருக்குக் கூட மதிப்பில்லையா? கூட்டணிக்குள் ‘குமரி’ புகைச்சல்! ஸ்டாலின் வைக்கும் ட்விஸ்ட்!

புத்தாண்டில் பைக் ரேஸ்: 242 பைக்குகள் பறிமுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share