உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜீரண சக்தியைத் தூண்டும் அருமருந்து தூதுவளை. அனைவருக்கும் ஏற்ற இந்த தூதுவளை ஸ்பாஞ்ச் தோசை, மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் நோய்களை விரட்டும் மாமருந்து.
என்ன தேவை?
ஆய்ந்த தூதுவளை – ஒரு கப்
வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
இட்லி அரிசி – 2 கப்
ஆமணக்கு விதை – ஒன்று
முழு உளுந்து – அரை கப்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஆமணக்கு விதை மற்றும் வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் முதலில் அரிசி – உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். இத்துடன் ஆமணக்கு விதை, வெந்தயம், தூதுவளை இலை சேர்த்து அரைத்து எடுத்து, மாவை உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணி நேரம் புளிக்கவிடவும். மாவில் இஞ்சி-பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தோசைகளாக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதை வெங்காயச் சட்னியுடன் சாப்பிடலாம். வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்துள்ளதால், தோசை ஸ்பாஞ்ச் மாதிரி மெத்தென்று இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…