பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் கான்பெராவிலுள்ள ஆஸ்திரேலிய பாரளுமன்றதில் உரை நிகழ்த்த சென்றார். அப்போது, ஆஸ்திரேலிய எம்.பி லிடியோ தோர்ப் என்பவர் மன்னர் சார்லஸை பார்த்ததும் ஆத்திரமடைந்து கத்த தொடங்கினார்.
‘இது உங்கள் நிலம் அல்ல நீங்கள் எங்கள் மன்னரும் அல்ல’ என்று கோஷமிட்டார். மேலும், ‘எங்களிடத்தில் இருந்து திருடிய பொருள்களை மீண்டும் எங்களிடத்தில் கொடுத்து விடுங்கள்’ என்றும் ‘ஐரோப்பிய குடியேறிகளால் ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் கொலை செய்யப்படுவதாகவும் லிடியா குற்றம் சாட்டினார். மன்னர் சார்லஸ் லிடியாவின் நடவடிக்கைககளை அமைதியாக பார்த்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா 100 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனுக்கு அடிமைப்பட்டு கிடந்தது. அப்போது, ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் பலர் கொல்லப்பட்டனர். ஐரோப்பியர்கள் குடியேற்றத்தால் அவர்கள் அப்புறப்படுத்தவும் பட்டனர்.
பின்னர், 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுதந்திரம் பெற்றது. எனினும் முற்றிலும் குடியரசாக மாறி விடவில்லை. இப்போதும் , பிரிட்டன் மன்னர்தான் ஆஸ்திரேலிய அரசின் தலைமை ஆட்சியாளராக கருதப்படுகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, லிடியா பதவியேற்ற போது அப்போது ஆஸ்திரேலிய ஆட்சியாளராக இருந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் பேசினார் என்பதும் குறிப்பிடத்ததக்கது.
கடந்த 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசின் தலைமை ஆட்சியாளராக பிரிட்டன் ராணி இருக்கலாமா? என்று ஆஸ்திரேலிய மக்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் பிரிட்டன் ராணியை தங்கள் ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை… இன்றையே ரேட் எவ்ளோ?