மூன்று நாட்களில் மூன்றாவது நிகழ்வு: ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை சரிந்து விபத்து!

Published On:

| By Kavi

மத்தியப் பிரதேசம், டெல்லியைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே ஹிராசர் கிராமத்தில் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதிதான் இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இவ்விமான நிலையம் திறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், பயணிகளை கால் டாக்சிகள் இறக்கி, ஏற்றும் இடத்தில் இருந்த மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.

ராஜ்கோட் பகுதியில் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

“மேற்கூரையின் மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. தண்ணீரை வெளியேற்றுவதற்கான பராமரிப்பு பணியின் போது, ​​மேற்கூரை சரிந்து விழுந்தது ” என்று விமான நிலைய இயக்குநர் திகந்தா போரா தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்திலும் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 27ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

மூன்று நாட்களில் மூன்றாவது விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டிருப்பது விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘கல்கி’ பார்ட் 2-க்கு வெறித்தமான வெயிட்டிங்: ரஜினி ட்வீட்!

பூரண மதுவிலக்கு சாத்தியமா? – சட்டமன்றத்தில் முத்துசாமி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share