The war in Gaza will continue

காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

இந்தியா

சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். The war in Gaza will continue

இஸ்ரேல் – ஹமாஸ் குழுக்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

காசா போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்றார்.

Gaza Strip Suffers Deadliest Day In 15 Years After Hamas Attack On Israel

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் குறித்து பகிர்ந்த வீடியோவில், “நாங்கள் கடைசி வரை போராடுவோம். இதற்குமேல் பேச எதுவுமில்லை.

போர் நிறுத்தத்துக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்தாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்பதை வலியுடன் பதிவு செய்கிறேன். யாராலும் எங்களைத் தடுக்க முடியாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம். அதைவிட எங்களுக்கு பெரிது எதுவும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை இஸ்ரேல் மக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன மக்கள் 18,500-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

7,000 விமான நிலைய பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தம் : காரணம் என்ன?

சென்னையில் மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
The war in Gaza will continue

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0