The stock market started with a rise.

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. கவனிக்க வேண்டிய பங்குகள் இவைதான்!

Share Market : செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கமான வர்த்தகத்திற்கு இடையே சென்செக்ஸ் 99.56 புள்ளிகள் உயர்ந்து 81,455.40புள்ளியிலும் நிஃப்டி 21.20 புள்ளிகள் உயர்ந்து 24,857.30 நிலையில் முடிவடைந்தது.

Tata Motors (3.38%), NTPC (3.24%), BPCL (3.08%), Power Grid (2.09%), Titan (1.77%) பங்குகள் விலை உயர்ந்து லாபத்தையும் LTIMindtree (-2.07%), SBI Life (-1.67%), Cipla (-1.61%), Grasim (-1.57%), Sun Pharma (-1.47%) நிறுவன பங்குகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நட்டத்தையும் கொடுத்தன.

தனியார் வங்கித் துறை சார்ந்த CUB (2.72%), HDFC Bank (1.76%), IndusInd (1.40%), IDFC First Bank (1.35%), RBL (1.21%) விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாரியக் குழு 1698.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீகாரில் புதிய குழாய் வழி கிரீன்ஃபீல்ட் டெர்மினல் கட்டுவதற்கு (நிலை – 1) ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்தியன் ஆயில் பங்கு 1.29% உயரந்து 182.72 ரூபாயில் முடிவடைந்தது.

ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 181.82 கோடியை ஈட்டியதாக பதிவுசெய்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் 107.25 கோடியை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது .

Tata Consumer Product நிறுவனம் 2024-25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபத்தில் 8.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து 290 கோடியை ஈட்டியதாகவும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 317 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 6.50 ரூபாய் விலை குறைந்து 1,194.90 ரூபாயில் முடிவடைந்தது.

ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான Jindal Drilling & Industries Limited நிறுவனம் 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 263.4 சதவீதம் உயர்ந்து 43.9 கோடியை ஈட்டியதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய 12.1 கோடியை ஒப்பிடுகையில் அபிரிதமான வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 75.35 ரூபாய் உயர்ந்து 676.15 ரூபாயில் முடிவடைந்தது.

புதன்கிழமை இன்று ஜப்பான் மத்திய வங்கி அதன் திட்டக்குழு கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் ஜப்பானில் ஈக்விட்டி குறியீடுகள் 1%க்கு மேல் சரிந்தன.

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் பங்குகள் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் சரிவை சந்தித்த நிலையில் பங்குச் சந்தை குறியீடுகள் நாஷ்டாக் 9% வரை சரிந்தது.

சீனாவின் PMI கணக்கீடு அறிவிப்புகள் எதிர்வரும் நாட்களில் வரவுள்ளதாக தகவல்களை ஆசிய முதலீட்டாளர்கள் கவனித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலில் நடந்து வரும் கலவரங்கள் ஆசிய பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 201.54 புள்ளிகளும் நிஃப்டி 29.40 புள்ளிகளும் உயர்வுடன் தொடங்கியது.

இன்று நடைபெற உள்ள ஃபீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்தில் முதல் காலாண்டு முடிவுகள் மற்றும் டிவிடெண்ட் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளிவரும் என்ற கணிப்பில் இன்று புதன்கிழமை Phoenix Mills Ltd பங்குகள் கவனம் செலுத்தப்படுகிறது.

ஜூலை 31 புதன்கிழமை இன்று ACE, Adani Power, AK Spintex, Ambuja Cements, Anup Engineering, Asahi India Glass, Bank of Baroda, Bansal Wire Industries, Bharat Heavy Electricals, Black Rose Industries, Birlasoft, Coal India, Cockerill India, Colinz Laboratories, Deepak Fertilisers & Petrochemicals Corporation உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

இன்று புதன்கிழமை வர்த்தகத்தில் SRF,BPCL, Dixon, Vedanta, GAIL, Coal India, BHEL, Adani Power நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

ஹமாஸ் இயக்கத் தலைவர் கொலை!

INDvsSL : சூப்பர் ஓவரில் இந்தியா அபார வெற்றி.. இலங்கை மோசமான சாதனை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts