சரிவுடன் தொடங்கிய share Market… கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் என்ன?

Published On:

| By christopher

What are the stocks to watch out for today

இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் வர்த்தக உயர்வை தக்கவைத்துக்கொண்டு வருவதால் இந்திய சந்தை கடந்த வாரம் உயர்வுடன் இருந்தது.

வெள்ளிக்கிழமை அமெரிக்கச் சந்தை நாஷ்டாக் புதிய உச்சத்தைத் தொட்டன. கடந்த வாரத்தில் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 963.87 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த வாரத்தில் மொமண்டம் இண்டிகேட்டர் மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் டைவர்ஜென்ஸ் (MACD) பட்டியலில் இரயில் விகாஸ் நிகாம் (RVNL), வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ், பிஇஎம்எல், தெர்மாக்ஸ், இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ், பேடிஎம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் லாபத்தைக் கொடுத்தன.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் அதிக மதிப்புள்ள முதல் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் Midcap சந்தை மூலதனம் 1.83 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக பங்குச் சந்தை அறிக்கை கூறுகிறது. கடந்த வாரத்தில் முறையே டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

TCS நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பீடு 38,894.44 கோடி உயர்ந்து 14,51,739.53 கோடியாக உயர்ந்தது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 33,320.03 கோடி உயர்ந்து அதன் மதிப்பு 6,83,922.13 கோடியாக உயர்ந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு 32,611.36 கோடி உயர்ந்து 21,51,562.56 கோடியாகவும். ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு23,676.78 கோடி உயர்ந்து 8,67,878.66 கோடியாகவும். ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) 16,950.99 கோடி உயர்ந்து 6,42,524.89 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 16,917.06 கோடி உயர்ந்து 5,98,487.89 கோடியாகவும், ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,924.13 கோடி உயர்ந்து 5,41,399.95 கோடியாகவும்,
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சந்தை மதிப்பு 9,995.57 கோடி உயர்ந்து 7,67,561.25 கோடியாகவும் உள்ளது.

எச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு 26,970.79 கோடி குறைந்து 12,53,894.64 கோடியாகவும். பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பு 8,735.49 கோடி குறைந்து 8,13,794.86 கோடியாகவும் உள்ளதாக தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீடு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மதிப்பு அடிப்படையில் மிகவும் செயலில் உள்ள பங்குகள் பட்டியலில் RVNL (ரூ. 71311 கோடி), ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 6,812 கோடி), மசாகன் டாக் ஷிப் (ரூ. 5,468 கோடி), இந்திய ரயில்வே ஃபின் (ரூ. 4,183 கோடி), கொச்சின் ஷிப்யார்ட் (ரூ. 3,569 கோடி), இர்கான் இன்டர்நேஷனல் (ரூ. 3,523 கோடி), மற்றும் பிஇஎம்எல் (ரூ. 3,462 கோடி) என NSEல் மிகவும் ஆக்டிவாக இருந்தன.

அதேநேரத்தில் பங்கு எண்ணிக்கை அடிப்படையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் YES வங்கி (பங்குகள் வர்த்தகம்: 98.5 கோடி), வோடபோன் ஐடியா (பங்குகள் வர்த்தகம்: 49.2 கோடி), இந்திய ரயில்வே ஃபின் (பங்குகள் வர்த்தகம்: 22.4 கோடி), RVNL (பங்குகள் வர்த்தகம்: 15.2 கோடி), இர்கான் (பங்குகள் வர்த்தகம்: 11.6 கோடி), சுஸ்லான் (பங்குகள் வர்த்தகம்: 9.6 கோடி), மற்றும் HFCL (பங்குகள் வர்த்தகம்: 8.1 கோடி) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் NSE அமர்வில் அதிகம் வர்த்தகம் செய்யப்பட்டன.

கடந்த வாரத்தில் RVNL, Vardhman Textiles, Ircon International, Raymond, BEML, CG Power, RailTel Corp நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வமாக வர்த்தகம் நடந்ததால் மேற்கண்ட நிறுவனங்களின் பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தன.

அதானி விவகாரம் அமெரிக்கா சீனா இந்தியா இடையே விவாத பொருளான நிலையில் நேற்று ஹிட்டன்பர்க் நிறுவனம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தாக்கம் இன்றைய சந்தை வர்த்தகத்தில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

Emcure Pharmaceuticals IPO பங்கு ஒதுக்கீடு திங்கட்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகு மற்றும் பேஷன் தளமான Nykaa வின் தாய் நிறுவனமான FSN E-Commerce Ventures Ltd, ஞாயிற்றுக்கிழமை FY2025 இன் முதல் காலாண்டு வர்த்தகத்தை அறிவித்தது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டை கணக்கிடுகையில் தோராயமாக 22-23% வருவாய் வளர்ச்சியைக் கணித்துள்ளதாக தெரிவித்துள்ளது. FSN E-Commerce Ventures Ltd இன் பங்கு கடந்த வெள்ளிக்கிழமை BSE இல் 3.59% அதிகரித்து 177.25 ரூபாயில் முடிந்தது.

Crompton Greaves Electrical Limited (CGCEL) ஞாயிற்றுக்கிழமை மஹாராஷ்டிராவின் வசாய்-விரார் சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனிடமிருந்து 9.54 கோடி வரி பாக்கி கட்ட நோட்டீஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் பங்கு கடந்த வெள்ளியன்று BSE இல் 0.20% அதிகரித்து 409.25 ரூபாயில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்த் வங்கி, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 100 கிளைகளையும் 100 புதிய ATMகளையும் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜூலை 8 திங்கள்கிழமை காலை முதல் அமர்வில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிந்து 79,8835 புள்ளிகளிலும், நிஃப்டி 50 குறியீடு 0.06 சதவீதம் சரிந்து 24,310 ஆகவும் தொடங்கியது.

பாங்க் ஆஃப் பரோடா முதல் காலாண்டு வர்த்தகத முடிவை அறிவித்த நிலையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 4% வீழ்ச்சியடைந்தது.

இன்று, IndusInd Bank, Titan, Nykaa, Marico, Dabur, Bank of Baroda, Adani Wilmar, Indian Bank, Signature Global, அப்போலோ மருத்துவமனைகள், பந்தன் வங்கி, ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இன்று கவனம் செலுத்தும் பங்குகளில் உள்ளன.

YES Bank, Inox Wind,Swan Energy,Midhani,BEL,AMFI Rejig,Threshold limit, SRF, ICICI Prudential Life insurance,Polycab India,Marico,Berger Paints நிறுவன பங்குகள் திங்கள்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மணியன் கலியமூர்த்தி

மூளையை திண்ணும் அமீபா… 3 சிறுவர்கள் பலி : தமிழக அரசு எச்சரிக்கை!

’இந்தியன் தாத்தா’ தோற்றம் உருவானது எப்படி? : சீக்ரெட்டை ஓபன் செய்த ஷங்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share