முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்!
எம்.எஸ்.சுவாமிநாதன், மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், கர்பூரி தாக்கூர் உள்ளிட்டோருக்கான பாரத ரத்னா விருதுகளை டெல்லியில் இன்று (மார்ச் 30) வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், விஞ்ஞானியுமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பிப்ரவரி 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால், எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்கூருக்கு விருது அறிவிக்கப்பட்டதை பலர் கடுமையாக விமர்சித்தனர்.
ஏனெனில், பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை 7 பேருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் நடைபெறும் 2024ஆம் ஆண்டில் மட்டும் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 30) பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் ஆகியோரின் குடும்பத்தினர் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டனர்.
அதேபோல், மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது மகள் இந்த விருதினை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
#WATCH | President Droupadi Murmu confers Bharat Ratna upon agronomist MS Swaminathan
The award was received by MS Swaminathan's daughter Nitya Rao pic.twitter.com/lZSdGmzNNt
— ANI (@ANI) March 30, 2024
தொடர்ந்து, கர்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினர் இன்று பெற்றுக்கொண்டனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டேனியல் பாலாஜி… கதறிய தாயார் – கலங்க வைக்கும் காட்சி!