நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று சில நிமிடங்களிலேயே ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் சௌரியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 11 மணியளவில் புறப்பட்டது.
ஓடுபாதையில் கட்டுபாட்டை இழந்த விமானம் சில நொடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது.
மேலும் விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில் இதுவரை விமான ஊழியர்கள் உட்பட 18 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி சாக்கியா மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்து நடந்தபோது பதிவான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின் : அண்ணாமலை விமர்சனம்!
பட்ஜெட் எதிரொலி : தொடர்ந்து சரியும் தங்கம் விலை… நகைக்கடையில் குவியும் பெண்கள்!