கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த வட்டி விகிதத்தை ஐரோப்பிய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் நேற்று (ஜூன் 6) யூரோ உள்ளிட்ட உலகலாவிய பங்குச் சந்தை உயர்ந்தது.
செப்டம்பரில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக பரவிய செய்தி மற்றும், நரேந்திர மோடி தலைமையிலான BJP யின் கூட்டணி NDA வின் புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ள காரணிகளால் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிவடைந்தன.
ஜூன் 6 வியாழக்கிழமை வர்த்தக முடிவில் பெஞ்ச்மார்க் குறியுடுகள் சென்செக்ஸ் 692.27 புள்ளிகள் அதிகரித்து 75,074.51 புள்ளியிலும் நிஃப்டி 201.05 புள்ளிகள் உயர்ந்து 22,821.40 புள்ளியிலும் முடிவடைந்தது.
BSEல் பட்டியலிடப்பட்ட டெக் மஹிந்திரா, எச்.சி.எல்.டெக், எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, நெஸ்லே இந்தியா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
NSEல் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் சரிவையும் டெக் மஹிந்திரா, எச்.சி.எல்.டெக், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எஸ்பிஐ லைஃப் மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகள் இன்ட்ரா டே வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டின.
நேற்றைய வர்த்தகத்தில் எஃப்எம்சிஜி, பார்மா, ஹெல்த் மற்றும் தனியார் வங்கியைத் தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்வுடன் முடிவடைந்தன.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பங்குகள் 8.93 சதவீதம் உயர்ந்து ஒரு பங்குக்கு 4,754 ரூபாய்க்கு இன் இன்ட்ராடே வர்த்தகத்தில் உச்சபட்சத்தை எட்டியது.
KNR Construction, Finolex Cables, Finolex Industries, Amara Raja Energy & Mobility, Mrs. Bectors Food Specialities, VA Tech Wabag (WABAG) and Ddev Plastiks Industries are உள்ளிட்ட 21 நிறுவன பங்குகள் BSE Smallcap indexல் 19% வரை உயர்ந்தன.
ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பங்குகள் மூலம் அனுமதிக்கப்பட்ட வகையில் 2,000 கோடியை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்த நிலையில் நேற்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு 5% வரை லாபத்தை கொடுத்தது.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிர்வாகக் குழு புதிய OFS மூலம் 4,000 கோடி திரட்ட ஐபிஓ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை RBI MPC பாலிசி முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இன்று காலை பென்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ப்ளாட்டாக தொடங்கியது.
ஜூன் 9ஆம் தேதி புதிய அரசு பதவி ஏற்க உள்ள நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ, டாடா கெமிக்கல்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பிபி ஃபின்டெக், பஜாஜ் ஃபைனான்ஸ், வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ், ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஆர்விஎன்எல்,Nava,UNO Minda, Aegis Logistics,KNR Constructions,Gulf Oil Lubricants நிறுவன பங்குகள் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…