இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இன்று (ஆகஸ்ட் 15) காலை ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கிடும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது.
இன்று 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை தேசிய கொடிகள் இறக்கப்பட்டன. குறிப்பாக இந்திய-பாகிஸ்தான், அட்டாரி-வாகா எல்லையில் ஏற்றப்பட்ட கொடியை ஏற்றுவதும், இறக்குவதும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கவனம் பெறும்.
ராணுவ உடையில் இருந்த பெண்கள் கையில் துப்பாக்கியுடன் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து, ராணுவ வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும் நடைபெற்றது. எல்லை பகுதி என்பதால் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், காலை ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஏராளமான மக்கள் கையில் தேசிய கொடியுடன் கண்டுகளித்தனர்.
மோனிஷா
ஊழல், குடும்ப அரசியலுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி