பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த், ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடந்தது.
என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகாவும், முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்தும் நீண்ட நாட்கள் நண்பர்கள்.
பல நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட நிலையில் காதல் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் ஆனந்த், ராதிகா நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் நிச்சயதார்த்தம் இன்று(ஜனவரி 19) பிரம்மாண்டமாக நடந்தது.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்ட நிச்சயதார்த்த விழாவில், ஷாருக்கான், கௌரி கான், ஆர்யன் கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆராத்யா பச்சன், கரண் ஜோஹர், அக்ஷய் குமார், சாரா அலி கான், நீது கபூர் போன்ற திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர்.
குஜராத்தை சேர்ந்த இந்துக்களால் கடைபிடிக்கப்படும் கோல் தானா மற்றும் சுனாரி விதி என்று இரண்டு சடங்குகள் செய்யப்பட்டது.
இதில் கோல் தனா என்பது நிச்சயதார்த்தத்திற்கு முன் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு. மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் வீட்டுக்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருவர்.
நிச்சயதார்த்த விழாவிற்கு தங்க நிற லெஹங்கா செட் அணிந்திருந்த ராதிகா தேவதையாக ஜொலித்தார். ஆனந்தின் தாயார் நீதா அம்பானி ஆரத்தியுடன் ஆண்டிலியா இல்லத்திற்கு அவரை வரவேற்றார்.
முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் உள்ளிட்ட அம்பானி குடும்ப உறுப்பினர்கள் அவரை கட்டியணைத்து வரவேற்றனர்.
பின்னர் நிச்சயதார்த்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்று, கணபதி பூஜையுடன் நிச்சயதார்த்தத்தை தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து திருமண பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர்.
பின்னர் ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவிக்க , குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
பின்னர் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். நீதா அம்பானி தலைமையில் குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கலை.ரா
திருமாவளவனுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நடிகைக்கு மிரட்டல்?
குந்தவைக்கும் நாட்டியம் கற்றுக் கொடுத்தவர் வழுவூரார்: முதல்வர் உரை!