அமெரிக்காவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஃபிட்னஸ் மாடலிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நபரிடம் அந்தப் பெண் போராடி தற்காத்துக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் திருமதி நஷாலி அல்மா. இவர் ஃபிட்னஸ் மாடல். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல உடற்பயிற்சி வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர்.
24 வயதான நஷாலி அல்மா, ஜனவரி 22 அன்று, தம்பாவில் உள்ள இன்வுட் பார்க் அபார்ட்மென்ட் வளாகத்தில் ஜிம்மில் தனியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது சேவியர் தாமஸ்-ஜோன்ஸ் என்பவர் ஜிம்மிற்குள் வந்து நஷாலியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் நஷாலி அந்த சூழ்நிலையில் பயப்படாமல் தாமஸை எதிர்த்துப் போராடுகிறார். ஆனாலும் தாமஸ் நஷாலியை விடாமல் தொந்தரவு செய்கிறார்.
ஒருகட்டத்தில் நஷாலியை எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்த தாமஸ் தப்பிச் செல்கிறார்.
இந்த வீடியோக் காட்சியை ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்டு, பெண்கள் இப்படிதான் துணிச்சலாக இருக்கவேண்டும் என்று பாராட்டி இருக்கிறது.
இதுகுறித்து நஷாலி “அவன் என்னை நெருங்கி வந்தவுடனே, நான் அவனைத் தள்ளினேன். நான் சொன்னேன், ப்ரோ, என்ன செய்கிறாய்? என்னிடமிருந்து விலகிச் செல்லுங்கள்.
என்னைத் தொட முயற்சிப்பதை நிறுத்துங்கள் என்றேன். அவர் என்னை பெஞ்சில் சுற்றி துரத்தத் தொடங்கினார். ஆனால் பயப்படாமல் எதிர்த்து அவரை விரட்டியடித்தேன் என்றார்.
“எனது அறிவுரை என்னவென்றால், ஒருபோதும் தைரியத்தை கைவிடக்கூடாது, என் பெற்றோர்கள் வாழ்க்கையில் எப்போதும் என்னிடம் சொன்னார்கள்,
எதையும் விட்டுவிடாதீர்கள், நான் அவருடன் சண்டையிடும் போது அதை நான் எப்போதும் மனதில் வைத்திருந்தேன்” என்று திருமதி நஷாலி கூறினார்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து தைரியமாக தன்னை தற்காத்துக் கொண்ட அமெரிக்கப் பெண்ணின் வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கலை.ரா
தமிழகம் வரும் திரவுபதி முர்மு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
தனுஷ் – செல்வராகவன் நேரடி மோதல்!