உலக நாடுகளுக்கு இணையாக ஆப்கானிஸ்தானை பொருளாதாரத்தில் முன்னேற்றும் வகையில் முதல் சூப்பர் காரை தாலிபான்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.

அதுமுதலே தாலிபான்கள் பல்வேறு கடுமையான சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
அதன்படி, பெண்கள் சிகிச்சைக்காக ஆண் மருத்துவரை அணுகக் கூடாது என்ற புதிய உத்தரவை அண்மையில் போட்டனர்.
ஏற்கனவே பெண்களுக்கு கல்வி கற்பதில் பல்வேறு வகையில் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதால் பெண் மருத்துவர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவுகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியில் மற்ற நாடுகளுக்கு இணையாக கொண்டு செல்லும் முயற்சியில் தாலிபான்கள் இறங்கியுள்ளனர்.
தாலிபான்களால் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர் காரை வெளியிட்டார் தாலிபான் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி.
அந்த வகையில் எண்டோப் எனும் நிறுவனத்தினால் சுமார் 5 ஆண்டுகளாக உருவாக்கபட்ட “மடா 9” எனும் சூப்பர் காரை தாலிபான் அரசு வெளியிட்டது.
உலக நாடுகளுக்கு இணையாக ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தில் முன்னேறும் என்றும், அதன் தொடக்கமே சூப்பர் கார் தயாரிப்பு என தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா
மெட்ரோ பாலம் விழுந்து விபத்து: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!