ஆந்திராவில் தாங்கள் நினைத்த வேட்பாளர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக பாதயாத்திரையாக திருப்பதி சென்றுள்ளனர்.
18வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அப்போது 4 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது.
அந்த வகையில், ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
இதனால், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல்வராக பதிவியேற்றார்.
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் வெங்கடமணி பிரசாத் புலி வர்த்தி என்ற நானி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் நானி வெற்றி பெற வேண்டும் எனவும், நானி வெற்றி பெற்றால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவதாகவும் தாமல செருவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊட்ல வங்க கிராம மக்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
தேர்தல் முடிவில் நானி சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் 1,43,667 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கரை விட 43,852 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனால், ஊட்ல வங்க கிராம மக்களின் பிரார்த்தனை நிறைவேறியதால் ஏழுமலையானுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து பாதயாத்திரை செல்ல முடிவு செய்துள்ளனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு நேற்று (ஜூன் 16) நடைபயணமாக திருப்பதிக்கு சென்றனர்.
பாதயாத்திரை சென்ற கிராம மக்களுக்கு நானியின் மனைவி சுதா ரெட்டி புலி வத்தி தாமல செருவு பகுதியில் வைத்து அன்னதானம் வழங்கி அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பதியில் தல அஜித் தரிசனம்… ரசிகர் கொடுத்த கிஃப்ட்!
ரயில் விபத்து: ஸ்பாட்டுக்கு சென்ற மத்திய ரயில்வே அமைச்சர்!