தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (நவம்பர் 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வரும் நவம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையைக் கொண்டாட கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்து திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வருவது கடினம் என்பதால் நவம்பர் 13 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இந்த கோரிக்கைகளை ஏற்ற தமிழ்நாடு அரசு நவம்பர் 13 ஆம் தேதியும் விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலும் திங்கட் கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று புதுவை திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று நவம்பர் 13 ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுமுறை அளித்து முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மழைக்கால மின் விபத்து… தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?: TANGEDCO எச்சரிக்கை!
வன்னியர் சங்க கட்டட நிலத்தை மீட்கும் உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்