சமூக வலைத்தளம் மூலம் பழகிய காதலனை சந்திக்கச் சென்ற பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உறுப்புகள் எடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 51 வயதான பிளாங்கா அரேலானோ என்ற பெண்ணுக்கு, பெரு நாட்டைச் சேர்ந்த ஜுவான் பாப்லோ ஜேசஸ் வில்லாஃபுர்டே(37) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற வயதான பிளாங்கா அரேலானோவுக்கு, ஜுவான் பாப்லோவை நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது.
இதையடுத்து தனது காதலனை சந்திப்பதற்காக 5000 கிலோ மீட்டர் பயணித்து பெரு தலைநகர் லிமாவிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து காதலனை சந்தித்த பிளாங்கா அரேலானோ நவம்பர் 7 ஆம் தேதி கடைசியாக தனது மருமகள் கார்லா அரேலானோவிடம் பேசியிருக்கிறார்.
காதலனை சந்தித்துவிட்டதாகவும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு பிளாங்கோவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து கார்லா, நவம்பர் 12 ஆம் தேதி, என் வாழ்க்கையில் மிகவும் விரும்பப்படும் மற்றும் முக்கியமான நபர்களில் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு உங்கள் ஆதரவைக் கேட்கிறேன்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“என் அத்தை பிளாங்கா நவம்பர் 7, பெருவில் காணாமல் போனார். அவரது காதலர் ஜுவான் பி உடன் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன்.
ஏனென்றால் அந்த நாட்டில் அவளுக்கு இருந்த ஒரே தொடர்பு அவர்தான். அவரது உயிருக்கு நாங்கள் அஞ்சுகிறோம் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நவம்பர் 10 ஆம் தேதி, பெருவில் உள்ள ஹவுச்சோ கடல் பகுதியில் வெள்ளி மோதிரத்துடன் துண்டிக்கப்பட்ட விரலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அது பிளாங்கா அரேலானோ என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் அரேலானோ காணாமல் போன சிறிது நேரத்துக்குப் பிறகு, கணையம் மற்றும் மூளை உள்ளிட்ட மனித உறுப்புகளைப் பிரித்தெடுப்பது போன்ற வீடியோக்களை ஜுவான் டிக்டாக்ல் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்டனர், அங்கு பல அறைகளில் இரத்தம் சிதறி இருந்ததை கண்டனர்.
விசாரணையில் ஜுவான் , காதலி பிளாங்கோவின் உடலை துண்டு, துண்டாக வெட்டி உடல் உறுப்புகளை எடுத்தது தெரியவந்தது.
“ஜுவான் பாப்லோ வில்லாஃபுர்டேவை மனித உறுப்புக் கடத்தல் குற்றச்சாட்டில் பெரு நாட்டு போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் தலைநகர் டெல்லியிலும், காதலனுடன் லிவிங் டூ கெதரில் இருந்த பெண் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
”ஆளுநரும் அண்ணாமலையும் மெண்டல்கள்”- மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி