உணவு பிரியர்களின் நாவிற்கு தீனி போடும் வகையில் `உலகின் சிறந்த உணவு நகரங்கள்’ பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
சென்னை 65வது இடம்!
இந்தப் பட்டியலில் மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய ஐந்து இந்திய நகரங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.
அவற்றுள் மும்பை (35-வது இடம்), ஹைதராபாத் (39-வது இடம்) ஆகிய நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்திருக்கின்றன. அடுத்ததாக டெல்லி 56-வது இடத்தையும், சென்னை 65-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக உலகின் சிறந்த உணவு நகரங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தை பிடித்திருக்கிறது.
பாவ் பாஜி, தோசை, வடை பாவ், சோலே பட்டூரா, கபாப், நிஹாரி, பானிபூரி, சோலே, குல்சே, பிரியாணி மற்றும் பலவிதமான சாட் வகை உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இத்தாலி முதலிடம்!
இந்தப் பட்டியலில் இத்தாலி நாடு முதலிடம் வகிக்கிறது. அங்குள்ள ரோம், போலோக்னா மற்றும் நேபிள்ஸ் ஆகியவை நகரங்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்திருக்கின்றன.
இந்த மூன்று இத்தாலிய நகரங்களும் பாஸ்தா, பீட்சா மற்றும் சீஸ் சார்ந்த உணவுகளுக்கு புகழ் பெற்றவை .
டாப் 10ல் வராத அமெரிக்கா!
நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஜப்பான், கிரீஸ், போர்ச்சுக்கல், சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் அங்கம் வகிக்கின்றன.
கஜகஸ்தான், அல்பேனியா , கிர்கிர்ஸ்தான், மியான்மர், நியூசிலாந்து, சவுதி அரேபியா , வடக்கு அயர்லாந்து, பஹாமாஸ், டொமினிகன் குடியரசு, வேல்ஸ் மற்றும் கானா ஆகியவை கடைசி 10 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளான உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : தொடைக்கறிக் குழம்பு