பணியாற்றும் ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் வகையில் டேட்டிங் செல்ல விடுமுறையும் அந்த நாட்களில் சம்பளமும் உண்டு என்கிற புதிய சலுகையை அறிவித்துள்ளது, தாய்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று.
ஒயிட்லைன் குரூப் என்ற இந்த நிறுவனம், பணியாற்றும் ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் வகையில் இந்த சலுகையை அறிவித்துள்ளது. நிறுவன ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் முயற்சியாக, பணியாளர்கள் டேட்டிங் செல்வதற்கு வசதியாக அதற்கு டிண்டர் லீவ் என்ற பெயரில், விடுமுறை எடுத்துகொள்ள அனுமதி அளிக்கிறது.
இதன்படி ஆண், பெண் ஊழியர்கள், அவர்கள் விரும்பிய நபர்களுடன் டேட்டிங் செல்லலாம். ஊழியர்களுக்கு, டிண்டர் கோல்டு மற்றும் டிண்டர் பிளாட்டினம் போன்ற சலுகை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், எத்தனை நாளைக்கு விடுமுறை என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பாங்காங் நகரை தலைமையிடம் என கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் 200 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் பணியாளர் ஒருவர், என்னால் டேட்டிங் செல்ல முடியாத அளவுக்கு பரபரப்பாக வேலை செய்து வருகிறேன் என சக பணியாளரிடம் வெறுப்பாக கூறியுள்ளார். இந்த விஷயம் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்தே இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்தில் உங்களை அழகாக்கும் ஆடையும் அணிகலன்களும்!
அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அட்மிட்!
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கம்… பின்னணி இதுதான்!
பேட் டச்: தாயிடம் போட்டு கொடுத்த குழந்தை… 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!
ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் என்ன?