தாய்லாந்து நாட்டிற்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் முக்கியமான நிதி ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது.
இங்குள்ள கடற்கரைகள், வணிக வளாகங்கள், புத்த கோவில்கள், மால்கள், உணவு வகைகள், உள்ளூர் சந்தைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதனால் வெளிநாட்டு பயணிகள் பலரும் தாய்லாந்து நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலா செல்வார்கள். கோவிட் தொற்று நோய்க்கு பிறகு தாய்லாந்து சுற்றுலாத்துறை கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை தாய்லாந்து அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் சீன பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது.
இந்தநிலையில் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது இந்திய பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் முதல் தேர்வாக தாய்லாந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்து அரசின் விசா தளர்வு அறிவிப்பும் இந்திய பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.
செல்வம்
எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டதா?
“இப்படி நடந்திருக்க கூடாது” : ஈபிஎஸ் கார் மீது செருப்பு வீசியது பற்றி ஓபிஎஸ் பதில்!