கலிபோர்னியாவிலுள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோவிலில் இந்துக்களே உங்கள் நாட்டுக்கு போங்கள் என்று வாசகம் எழுதப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் சில விஷமிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில், சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஹிந்து கோவில் ஆகும். அதோடு, உலகின் 2வது மிகப்பெரிய கோவில் எனவும் சிறப்பை பெற்றுள்ளது. நியூயார்க் நகரின் முக்கிய அடையாளமாகவும் இந்த கோவில் பார்க்கப்படுகிறது. இங்கு, நியூயார்க் நகர மக்கள் வழிபாடுசெய்வார்கள்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த கோவிலுக்குள் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதல் நடந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. அமெரிக்காவில் இந்துக்கள் கவலைப்படும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கலிபோர்னியாவில் ஸ்ரீசுவாமி நாரயண் ஆலயத்தில்’ இந்துக்களே உங்கள் நாட்டுக்கு போங்கள்’ என்று விஷமிகள் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர். இந்த வாசகத்தை பார்த்த இந்துக்கள் அதிர்ந்து போனார்கள். தொடர்ந்து, அமெரிக்க இந்து ஃபவுண்டேஷன் அமைப்பை சேர்ந்தவர்கள், கோவிலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும், சகிப்புத்தன்மையின்மை, வெறுப்புணர்வை விதைப்பவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவேம் என்றும் இந்து ஃபவுண்டேசன் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
எஸ்.பி.பி பெயரில் சாலை… முதல்வருக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.பி மகன்!
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை… அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அலர்ட்!
Comments are closed.