மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடுவது எப்படி? என ரீல்ஸ் போட்டு இளைஞர்கள் சிக்கிய சம்பவம் ஹைதராபாத் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (22). இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாகி வருகிறார்.
சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பிரபல சூப்பர் மார்க்கெட்டான டி மார்ட்டிற்கு சென்று மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி? என்ற தலைப்பில், ரீல்ஸ் போடுவதற்காக ஒரு சாக்லேட்டை திருடி நைசாக சாப்பிட்டு இருக்கிறார்.
அவர் சாக்லேட் சாப்பிடும் போது அவருடைய நண்பர் வீடியோ எடுத்துள்ளார். ஆனால் இருவரும் யாரிடமும் சிக்காமல் வீடு திரும்பி விட்டனர்.
பின்னர் வீடியோவை ஹனுமான் நாயக் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார். வேகமாக பரவிய இந்த வீடியோ சூப்பர் மார்க்கெட் மேனேஜரின் கவனத்திற்கு சென்றது.
இதைத்தொடர்ந்து மேனேஜர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் ஹனுமான் நாயக் அவருடைய நண்பர் ஆகியோர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர்கள் சாக்லேட் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசிக மாநாடு: வேன் விபத்து பின்னணி!
கோவை இளைஞரின் கேமராவில் சிக்கிய தங்கநிற புலி… எங்கேன்னு பாருங்க!