ஸ்கூட்டர் ஷோருமில் தீ விபத்து: 8 பேர் பலி!

இந்தியா

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோருமில் ஏற்பட்ட தீ விபத்தில், மூச்சுத்திணறல் காரணமாக 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (செப்டம்பர் 12) இரவு 10 மணியளவில் செகந்தராபாத்தில் உள்ள இ ஸ்கூட்டர் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது ஷோ ரூமிற்கு மேல் உள்ள ஹோட்டலுக்கு பரவியது.

அந்த ஹோட்டலில் 25 பேர் தங்கி இருந்தனர். ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூச்சுத்திணறல் காரணமாக, அங்கு தங்கியிருந்த 8 பேர் உயிரிழந்தனர்.

telangana e scooter showroom fire accident

இந்த தீ விபத்து குறித்து ஹைதராபாத் கமிஷனர் ஆனந்த் கூறும்போது, “நான்கு தளங்களைக் கொண்ட இந்த ஓட்டலில் 23 அறைகள் உள்ளன.

கீழ் தளத்தில் உள்ள இ ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தினால், அடர் புகை மேல் தளம் வரை சென்றது. முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அடர்ந்த புகை வந்ததால் கீழ் தளத்திற்கு வந்து மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர்.

தீ விபத்து நடந்தவுடன் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேல் தளத்தில் உள்ள சிலர் ஜன்னல் வழியாகக் கீழே குதித்தனர்.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.” என்றார்.

தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைக்கும் போது, வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு மருத்து சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செல்வம்

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *