பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட ஐ.டி. ஊழியர் சாவதற்கு முன் வெளியிட்ட வீடியோவை எலான் மஸ்க், டிரம்ப் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டத்தால் பெங்களூருவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 34 வயது ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அதுல் சுபாஷ் என்பவர் அக்சஞ்சரில் பணி புரியும் நிகிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உண்டு.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில நீதிமன்றத்தில் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாதம் 1.20 லட்சம் சம்பளம் வாங்கிய நிகிதா மாதம் 40 ஆயிரம் ஜீவானம்சமாக பெற்று வந்துள்ளார். அதோடு, மாதம் 2 லட்சம் தர வேண்டுமென்றும் செட்டில்மென்டாக 3 கோடி கேட்டும் நிகிதா முன்னாள் கணவரை தொந்தரவு செய்துள்ளார். மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் தொல்லை காரணமாக அதுல் தன் உயிரை மாய்த்து கண்டார்.
தற்கொலைக்கு முன் 24 பக்க கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவற்றை இந்திய சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களை அதுல் டேக் செய்துள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, சட்டம் எந்த வகையிலும் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை. எனது உடலின் அருகில் கூட மனைவியோ அவரின் குடும்பத்தினரோ வரக் கூடாது. இந்த நாட்டு மக்கள் எனது சாவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனது கடிதம், வீடியோக்களை மக்களை சென்றடைய வேண்டும். எனது சாம்பலை கரைக்க வேண்டாம். எனது மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், எனது சாம்பலை நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாக்கடையில் போடுங்கள்.
விவாகரத்து வழக்கு விசாரணையின் போது என் குழந்தையை நிகிதா நீதிமன்றத்துக்கு அழைத்து வரவில்லை. நான் குழந்தையை பார்க்க கூடாது என்பதே அவரின் எண்ணம். இனிமேல், அனுதாபம் பெற குழந்தையை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவார். இந்த நாடகத்தை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது. என் மனைவி எனது வயதான பெற்றோரை பணம் கேட்டு தொந்தரவு செய்தால், நீதிமன்றத்தை அணுகி அவர்கள் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்பார்கள். அதை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.
இன்னும் பல அதிர்ச்சி தகவல்களை அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
“வடிவேலு குறித்து இனி தவறான கருத்து தெரிவிக்க மாட்டேன்”: நடிகர் சிங்கமுத்து