உலகளவில் இரண்டாவது மதிப்பு வாய்ந்த ஐடி நிறுவனம் என்னும் பெருமை, இந்திய ஐடி நிறுவனம் ஒன்றிற்கு கிடைத்துள்ளது.
பிராண்ட் பைனான்ஸ் (Brand Finance) என்னும் நிறுவனம் வருடம் தோறும் உலகின் சிறந்த ஐடி நிறுவனங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி தரவுகளை வெளியிடும். அதேபோல இந்த ஆண்டும் உலகளவில் 500 ஐடி நிறுவனங்களின் சேவைகளை தரவரிசைப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் இந்த 2024-ம் ஆண்டிற்கான டாப் 10 நிறுவனங்கள் குறித்து அந்நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்திய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2-வது இடம் பிடித்துள்ளது.
புதுமை, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய விரிவாக்கம் போன்ற காரணங்களால் இந்த இடம் டாடா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் 11.5% டாடா நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தை ஐரிஷ் நிறுவனமான அசெஞ்சர் தக்க வைத்துள்ளது. தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேல் அசெஞ்சர் நிறுவனம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் 3-வது இடத்தினை இன்போசிஸ் நிறுவனமும், 4-வது இடத்தை ஐபிஎம் கன்சல்டிங் நிறுவனமும், 5-வது இடத்தை கேப்ஜெமினி நிறுவனமும் பிடித்துள்ளது.
இதேபோல 6, 7 இடங்களை முறையே என்டிடி டாடா மற்றும் காக்னிசன்ட் நிறுவனங்களும் 8-வது இடத்தினை ஹெச்சிஎல் நிறுவனமும் 9 மற்றும் 10-வது இடங்களை விப்ரோ மற்றும் பிஜூட்ஸு நிறுவனங்களும் பிடித்துள்ளன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…