கூடுதல் நிதி ஒதுக்கியும் தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வு குறைவு: எவ்வளவுனு பாருங்க?

Published On:

| By Kavi

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வரி வருவாயில் இருந்து மாதம்தோறும் நிதி அளித்து வருகிறது

இந்த நிலையில் மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் இந்த மாதம் அதிக தொகை ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த டிசம்பரில் ரூ.89,086 கோடி விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ரூ.1,73,030 கோடியாக உயர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆந்திர பிரதேசத்துக்கு ரூ. 7002.52 கோடி, அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.3040.14 கோடி, அசாம் மாநிலத்துக்கு ரூ. 5412.38 கோடி, பீகாருக்கு ரூ.17403.36 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ. 5895.13 கோடி,

கோவாவுக்கு ரூ. 667.91 கோடி, குஜராத்து மாநிலத்துக்கு ரூ. 6017.99 கோடி, ஹரியானாவுக்கு ரூ.1891.22 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1436.16 கோடி, ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரூ. 5722.10 கோடி வரிப்பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு ரூ.6310.40 கோடி,கேரளாவுக்கு ரூ.3330.83 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.13,582.86, மகாராஷ்டிராவுக்கு ரூ.10,930.31 மணிப்பூருக்கு ரூ.1238.90 கோடி, மேகாலயாவுக்கு ரூ.1327.13 கோடி, மிசோரத்துக்கு ரூ.865.15 கோடி, நாகலாந்துக்கு ரூ.984.54 கோடி, பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.3126.65 கோடி, ஒடிசாவுக்கு ரூ.7834.80 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.10,426.78 சிக்கிமுக்கு ரூ.671.35 கோடி,

தமிழகத்திற்கு வரிப்பகிர்வாக ரூ. 7057.89 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தெலங்கானாவுக்கு ரூ.3,637.09 கோடி, திரிபுராவுக்கு ரூ.1,225.04 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.31,039.84 கோடி , உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1934.47 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13017.06 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் , மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

’நாங்கள் இரட்டை வேடம்னா, நீங்கள் நான்கு வேடம்’- சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs எடப்பாடி

22 வருஷ இழுத்தடிப்பு… மா.சுவுக்கு நிம்மதி பெருமூச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel